அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக இன்று முழு அடைப்பு: ஜார்க்கண்டில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

டெல்லி: அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதால் வடமாநிலங்களில் பதற்றம் நிலவுகிறது. இளைஞர்களின் கொந்தளிப்பையும், ஆவேச போராட்டத்தையும் மீறி அக்னிபாதை திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் அறிவிக்கையை அரசு வெளியிட்டிருப்பதால், நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால் உத்திரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஜார்க்கண்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் ரயில் நிலையங்கள், ராணுவ பணிக்கான பயிற்சி மையங்கள் போன்றவற்றில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  அக்னிபாதை திட்டம் தொடர்பாக பொய்யான தகவல்கள் பரப்பியதாக 5 வாட்ஸ் அப் குழுக்களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. எனினும் இந்த வாட்ஸ் அப் குழுக்கள் பற்றியோ அல்லது அவற்றின் அட்மின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.       

Related Stories: