எடப்பாடிக்கு தான் தலைமை ெபாறுப்பை தர வேண்டும்: முன்னாள் எம்எல்ஏ ஜக்கையன் பேட்டி

சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தின் மாவட்டமான தேனி மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சென்னையில் நேற்று எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் சந்தித்தனர். அப்போது தங்களது ஆதரவை எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்து ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

சந்திபிற்கு பின்னர், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஜக்கையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

அதிமுகவிற்கு பல்வேறு சமயங்களில் சோதனைகள் வந்துள்ளது. அதிமுகவிற்கு தலைமை தாங்குவது யார் என்ற கேள்வி தற்போது வந்துள்ளது. இந்த நேரத்தில் தலைமை கழகம், செயலாளர்கள், நிர்வாகிகள் ஏற்கனவே இதுகுறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்கள். வரும் 23ம் தேதி அதற்கு நல்ல தீர்வு கிடைக்கும் வகையில் பொதுக்குழு நடைபெறும். அந்தவகையில் தேனி மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடியை சந்தித்து ஒற்றை தலைமை வேண்டும் .

அதை அவரே வழிநடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். இதுகுறித்து வலியுறுத்தி கூறியிருக்கிறோம். தேனி மாவட்டத்தில் அதிகமான நிர்வாகிகள் எடப்பாடிக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர். தலைமை பொறுப்பை எடப்பாடிக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும். மூத்த தலைவர்களும் சமரச பேச்சில் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறு கூறினார்.

Related Stories: