கும்மிடிப்பூண்டியில் விவசாயிகள் சங்க வட்ட மாநாடு

கும்மிடிப்பூண்டி: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கும்மிடிப்பூண்டி வட்ட மாநாடு நேற்று  கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் பி.கருணாமூர்த்தி தலைமை தாங்கினார். முன்னதாக  மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சிவகுமார் வரவேற்றார்.மாவட்ட குழு உறுப்பினர் ஆண்டவன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வட்டச் செயலாளர் எம்.ரவிகுமார் அறிக்கையை முன்மொழிந்தார். சங்கத்தின் மாநில பொருளாளர் கே.பி.பெருமாள் துவக்கி வைத்தார்.

மாவட்ட தலைவர் ஜி.சம்பத் மாநாட்டை நிறைவுறை ஆற்றினார். வெங்கடேசன் நன்றி கூறினார். இதில் தலைவராக எம்.ரவிகுமார், செயலாளராக எம்.சிவகுமார், பொருளாளராக என்.வெங்கடேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.

அதிகரிக்கும் சுற்றுச்சூழல் மாசை தடுக்க வேண்டும். வங்கிகள் மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். அரசு பேருந்து இயக்கவும், குடிமனைபட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: