யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு விமான சேவை

கொழும்பு:இலங்கையில், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டின் மிக முக்கிய வருவாய் துறையான சுற்றுலாத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையில் வடக்கு மாகாணமான யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு அடுத்த மாதம் முதல் விமானப் போக்குவரத்தை தொடங்க இருப்பதாக இலங்கை விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், `தற்போதுள்ள ஓடுதளம் 75 இருக்கை கொண்ட விமானங்கள் மட்டுமே வந்து செல்லக் கூடியதாக இருக்கிறது. எனவே, இதனை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா இதற்கு உதவும் என இலங்கை அரசு எதிர்பார்க்கிறது. நடப்பாண்டில் 8 லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் சுற்றுலாத் துறை திட்டமிட்டு வருகிறது,’ என்று தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த 2019ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு விமானப் போக்குவரத்து செயல்பட்டு வந்தது. ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் இந்த சேவை நிறுத்தப்பட்டது.

Related Stories: