3 பெண்களிடம் 19 சவரன் பறிப்பு

பெரம்பூர்: ஓட்டேரி சுப்புராயன் மெயின் தெருவை சேர்ந்த சுபா (51), நேற்று முன்தினம் இரவு தனது இருசக்கர வாகனத்தில் அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலை வழியாக சென்றபோது, பைக்கில் வந்த 3 பேர், சுபாகழுத்தில் கிடந்த தாலி செயினை பறிக்க முயன்றனர். அப்போது சுபா, செயினை பிடித்துக்கொண்டதால், இரண்டாக அறுந்து,  இரண்டரை சவரன் செயினுடன் ஆசாமிகள் தப்பினர். இதேபோல், கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த வனஜா (56), தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பைக்கில் வந்த 3 பேர், வனஜா கிடந்த மூன்றரை சவரன் தாலி செயினை பறித்து சென்றனர். போலீசார் விசாரணையில், இந்த 2 சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே நபர்கள் என தெரியவந்தது. அவர்களை தேடி வருகின்றனர். கொளத்தூர் ஐயப்பா நகர் 3வது குறுக்கு தெருவை சேர்ந்த சந்திரா (54), நேற்று முன்தினம் இரவு தனது கணவனுடன் கொளத்தூர் செந்தில் நகர் 2வது மெயின் ரோடு வழியாக நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சந்திரிகா கழுத்தில் கிடந்த 13 சவரன் தாலி செயினை பறித்து சென்றனர்.

Related Stories: