அதிமுக இளைஞரணி எடப்பாடிக்கு ஆதரவு

சென்னை: எடப்பாடி பழனிசாமியின் கீழ் ஒற்றை தலைமையில் அதிமுக அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தி, அதிமுக இளைஞர் அணி எடப்பாடிக்கு அதரவு தெரிவித்துள்ளது. அதிமுக இளைஞர் அணி செயலாளர் சிவபதி மற்றும் நிர்வாகிகள் நேற்று காலை எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். பின்னர், சிவபதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எடப்பாடி இளைஞர்களின் நாயகனாக திகழ்கிறார்.இளைஞரணி, இளம்பெண்கள் பாசறை ஆகியவற்றின் ஆதரவு 100 சதவீதம் எடப்பாடிக்கே. எடப்பாடி தலைமையில் ஒற்றைத் தலைமை வர வேண்டும். ஒற்றை தலைமை குறித்து எடப்பாடியிடம் தெரிவித்தோம். பொதுச்செயலாளர் பொறுப்பை மீண்டும் கொண்டுவருவது ஜெயலலிதாவிற்கு செய்யக்கூடிய துரோகம் என்று ஓபிஎஸ் சொல்வது அவரது கருத்து. எடப்பாடி தலைமையில் அதிமுக வர வேண்டும் என்பதே எங்களது எண்ணம்.

Related Stories: