×

மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் சுடரை வரவேற்க ஆவல் முதல்வர் டிவிட்

சென்னை: மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் சுடரை வரவேற்க ஆவலாக உள்ளோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: உலக செஸ் பேரவை முதன்முறையாகத் தொடங்கியுள்ள செஸ் ஒலிம்பியாட் சுடரின் தொடர் ஓட்டத்தை  இந்தியப் பிரதமர்  தொடங்கி வைத்துள்ளார். இவ்வேளையில், இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிகுந்த இத்தருணத்தின் பின்னணியில் இருப்பதில் சென்னை பெருமைகொள்கிறது. தொடர் ஓட்டத்தின் முடிவில் மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் சுடரை வரவேற்க ஆவலுடன் உள்ளோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Chief Minister ,Dwight ,Olympiad flame ,Mamallapuram , Chief Minister Dwight wants to welcome the Olympiad flame in Mamallapuram
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...