2 மாதத்திற்கு முன் மனைவி தற்கொலை செய்த நிலையில் கன்னட நடிகர் குத்திக் கொலை: பெங்களூருவில் பரபரப்பு

பெங்களூரு: பெங்களூருவில் கடந்த 2 மாதத்திற்கு முன் மனைவி தற்கொலை ெசய்து கொண்ட நிலையில், கன்னட நடிகர் சதீஸ் வஜ்ரா மர்ம நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஆர்ஆர் நகர் பகுதியில் வசிக்கும் பிரபல கன்னட நடிகர் சதீஸ் வஜ்ரா, நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது வீட்டிற்கு வந்த 2 மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பிவிட்டது. இந்த நிலையில் நேற்று வீட்டின் முன்பக்க தாழ்வாரத்தை சுத்தம் செய்த வீட்டின் உரிமையாளர், சதீஸ் வஜ்ராவின் வீட்டின் முகப்புப் பகுதியில் ரத்தக்கறை படிந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் வீட்டின் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்தார். இதில், ​நள்ளிரவு 12:30 மணியளவில் இரண்டு மர்ம நபர்கள் வந்து சென்றது தெரியவந்தது. மேலும் அந்த நபர்கள், நடிகர் சதீஸ் வஜ்ராவின் பைக்கையும் எடுத்துச் சென்றுள்ளனர். சிசிடிவி கேமராவில் சேகரிக்கப்பட்ட விபரங்களின் அடிப்படையில், வீட்டின் உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டிற்குள் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த சதீஸ் வஜ்ராவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன் விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் சதீஸ் வஜ்ராவின் மனைவி தற்கொலை செய்து கொண்டார். அதனால், அவரது தற்கொலை சம்பவத்திற்கும், இந்த கொலைக்கும் தொடர்புள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.

Related Stories: