×

முப்படை தளபதிகளின் ஒப்புதலுடன் உருவாக்கப்பட்ட அக்னிபத் திட்டம் ஒருபோதும் திரும்பப் பெற மாட்டாது: ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் திட்டவட்டம்..!

டெல்லி: முப்படைகளில் இளைஞர்களின் பங்கை அதிகரிக்கவே அக்னிபத் திட்டம் என ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் அனில் புரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ‘அக்னிபாதை’ திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டம்  நடத்தி வரும் நிலையில், ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின்  இல்லத்தில் இன்று முப்படைகளின் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். அக்னிவீரர் ஆட்சேர்ப்பு திட்டம் தொடர்பாக, ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; அக்னிபத் திட்டம் தொடர்பாக விளக்கம் அளித்தார். முப்படைகளில் இளைஞர்களின் பங்கை அதிகரிக்கவே அக்னிபத் திட்டம்.

பல்துறை அதிகாரிகளும் ஆலோசித்த பின்னரே அக்னிபத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ராணுவத்தை இளமை சக்தியுடன் சீரமைக்க வலியுறுத்திய பரிந்துரைகளின் படி அக்னிபத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்னிவீரர்களுக்கு ராணுவ வீரர்களுக்கு இணையான அனைத்து சலுகைகளும் வழங்கப்படும். சியாச்சினில் பணிபுரிவோருக்கு கிடைக்கும் அதே படித் தொகை அக்னிபத்  திட்டத்தில் சேருவோருக்கும் கிடைக்கும். அக்னிவீரர்கள் உயிர் தியாகம் செய்தால் ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும். ராணுவத்தில் ஒவ்வொரு ஆண்டும் 17,600 பேர் பணி முதிர்வு காலத்துக்கு முன்பே ஓய்வு பெறுகின்றனர். ராணுவத்தில் பணியாற்றும் யாரும் சேவைக்கு பின் என்ன செய்ய போகிறோம் என கேள்வி கேட்டதில்லை.

அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளுக்கு 50,000 முதல் 60,000 வரை வீரர்களை தேர்ந்தெடுக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது. ராணுவத்திற்கு ஆள் எடுப்பதை படிப்படியாக 1 லட்சம் வரை உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அக்னிபத் திட்டத்தில் சேருவோர் போராட்டத்தில் ஈடுபடவில்லை என பிராமணப் பத்திரம் அளிக்க வேண்டும். அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப் படைக்கு பெண்களும் ஜூன் 24ம் தேதி முதல் சேர்க்கப்படுவர். அக்னிபத் திட்டத்தில் விண்ணப்பிக்கும் இளைஞர்கள் தீவைப்பு, வன்முறை, போராட்டம் ஆகியவற்றில் பங்கெடுத்தது இல்லை என்ற உறுதிமொழி அளிக்க வேண்டும். 100% காவல்துறை வெரிபிகேஷன் உண்டு, அது இல்லாமல் ஒருவரும் சேர முடியாது.

முதல் தகவல் அறிக்கையில் பெயர் இடம் பெற்றிருந்தால் ராணுவத்தில் சேர முடியாது. முப்படை தளபதிகளின் ஒப்புதலுடன் உருவாக்கப்பட்ட அக்னிபத் திட்டம் ஒருபோதும் திரும்பப் பெற மாட்டாது. அக்னிபத் திட்டத்தின் மூலம் முப்படைகளில் சேரவும் வாய்ப்பு உள்ளது. அக்னிபத் திட்டத்தில் வருங்காலத்தில் 1.25 லட்சம் பேர் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு கூறினார்.


Tags : Mumbai ,Commanders , The fire plan created with the approval of the three commanders will never be withdrawn: Army Lieutenant General Plan ..!
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!