×

கரூர் பகுதியில் தொடர் மழை; கணபதிபாளையம் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது: மக்கள் அவதி

கரூர்: கரூரில் பெய்த கனமழையால் கணபதி பாளையம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். கரூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் கோடை மழை வெளுத்து வாங்கியது குறிப்பாக கரூரில் 59.3 மில்லி மீட்டர் மழை பதிவானது இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது தான்தோன்றி மலை பகுதியில் உள்ள குடித்தெரு கணபதி பாளையம், சக்தி நகர் ஆகிய பகுதிகளில் மழை நீர் முழங்கால் அளவிற்கு சென்றது. இப் பகுதிகளில் வடிகால் வசதி சரிவர செயல்படாத காரணத்தால் மழைநீர் ஒழுங்காக வெளியே செல்ல முடியவில்லை .

இதனால் மழை நீரானது வீடுகளுக்குள் சென்று பொதுமக்கள் இரவு தூங்க முடியாமல் அவதிப்பட்டனர் .பலர் தங்கள் வீட்டில் உள்ள பாத்திரத்தில் மழை நீரை பிடித்து வெளியே அப்புறப்படுத்தினர். இதனால் இப் பகுதியில் குடியிருக்கும் மக்கள் இரவில் சிறு குழந்தையுடன் தூங்க முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். எனவே நகராட்சி அதிகாரிகள் கணபதி பாளையம் பகுதியில் மழைநீர் வடியும் 6 தகுந்த சாக்கடை வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Karur ,Ganapathipalayam , Continuous rain in Karur; Water seeps into Ganapathipalayam residence: People suffer
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...