பசுமைக்கு திரும்பியது ரோஜா பூங்கா: 2ம் சீசனுக்கு தயார் செய்யும் பணி மும்முரம்

ஊட்டி: ஊட்டி ரோஜா பூங்காவில் முதல் சீசன் முடிந்த நிலையில், தற்போது 2ம் சீசனுக்கான பணிகள் துவக்கப்பட்டு நடந்து வருகிறது. ஊட்டியில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மழை பெய்த நிலையில், ரோஜா பூங்காவில் உள்ள புல் தரைகள் மற்றும் மலர் செடிகளில் பசுமை அப்படியே உள்ளது.

எனவே, அவைகளை 2ம் சீசனுக்கு தயார் செய்யும் பணிகளில் தற்போது பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மலர் செடிகளில் வளர்ந்த செடிகளை அகற்றவும், உதிர்ந்த மலர்களை அகற்றும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், புல் தரைகளை சமன் செய்யும் பணிகள் மற்றும் வளர்ந்த புற்களை அகற்றும் பணிகளும் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. இம்முறை கோடையில் மழை பெய்துள்ள நிலையில், 2ம் சீசனின் போது, ரோஜா பூங்காவில் முதல் சீசன் போன்று அனைத்து செடிகளிலும் ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளில் ரோஜா பூங்கா நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

Related Stories: