×

வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 274 குவிண்டால் பருத்தி ரூ.28.84 லட்சத்து ஏலம்

வலங்கைமான்: திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வலங்கைமான் நீடாமங்கலம் சாலையில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் வேளாண்மை துறை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி இரண்டாவது ஏலம் நேற்று முன்தினம் ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் சரசு உத்தரவின் பேரில் ஒழுங்குமுறை விற்பனை கூட மேலாளர் வீராச்சாமி முன்னிலையில் நடைபெற்றது.

50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பஞ்சினை விற்பனைக்காக ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்தனர். பருத்தி அதிகபட்ச விலையாக குவிண்டால் 11 ஆயிரத்து 899ரூபாய்க்கும், குறைந்த பட்ச விளையாக குவிண்டால் 9 ஆயிரத்து 363 ரூபாய்க்கும் சராசரி விலையாக குவிண்டால் 10 ஆயிரத்து 449 ரூபாய்க்கு ஏலம் போனது.

நேற்றுமுன்தினம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 274.13 குவிண்டால் பருத்தி 28 லட்சத்து 84 ஆயிரத்து 299 ரூபாய்க்கு ஏலம் போனது. ஏலத்தில் நான்கு வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

வாரம்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் பருத்தி ஏலத்தில் பருத்தி விவசாயிகள்இடைத்தரகர்கள் இன்றி சரியான எடையில் நல்ல விலையில் விற்பனை செய்து பயன்பெற ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேலாளர் வீராச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.



Tags : Valangaiman Regulatory Sales Hall , 274 quintals of cotton auctioned at Rs. 28.84 lakhs at Valangaiman Regulatory Sales Hall
× RELATED வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை...