×

போராட்டம் நடத்துவது தீவிரவாதம் அல்ல!: சி.ஏ.ஏ. போராட்டத்தின் போது உபா சட்டத்தில் கைதான 3 பேருக்கு ஜாமீன்…டெல்லி ஐகோர்ட் ஆணை..!!

டெல்லி: டெல்லியில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற மூவருக்கு ஜாமீன் வழங்கியுள்ள டெல்லி உயர்நீதிமன்றம், போராட்டங்களில் பங்கேற்பது தீவிரவாத நடவடிக்கை ஆகாது என தெரிவித்துள்ளது. டெல்லியில் கடந்த ஆண்டு குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இது தொடர்பாக போராட்டத்தில் பங்கேற்ற நட்டாஷா நிர்வால், தேவங்கனா கலிட்டா, ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர் ஆஷப் டான்கா ஆகியோர் கடந்த ஆண்டு மே மாதம் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். 
இவர்களின் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், மூவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அரசியல் அமைப்பு உறுதி செய்துள்ள போராட்டத்திற்கான உரிமை மற்றும் தீவிரவாத நடவடிக்கை ஆகியவற்றிற்கான வேறுபாடு தெளிவின்றி புரிந்துக் கொள்ளப்படுவதாகவும் இது ஜனநாயகத்தில் கவலைக்குரிய அம்சமாக உள்ளதாகவும் டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post போராட்டம் நடத்துவது தீவிரவாதம் அல்ல!: சி.ஏ.ஏ. போராட்டத்தின் போது உபா சட்டத்தில் கைதான 3 பேருக்கு ஜாமீன்…டெல்லி ஐகோர்ட் ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Delhi High Court ,Delhi iCourt Order ,Dinakaran ,
× RELATED இறந்த கணவரின் சொத்தில் மனைவிக்கு முழு...