அண்ணாநகர் டவர் பூங்காவில் குற்ற தடுப்பு விழிப்புணர்வு: போலீசார் ஏற்பாடு

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் டவர் பூங்காவில், குற்ற சம்பவங்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, அண்ணாநகர் துணை ஆணையர் விஜயகுமார், உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. இதில், துணைஆணையர் விஜயகுமார், அங்கு நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்வதற்காக வந்த ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமிகளிடம் ஒலிப்பெருக்கி மூலம் வழிப்பறி, கொள்ளை, செயின் பறிப்பு, பாலியல் அத்துமீறல் உள்ளிட்டவைகளை தடுக்கும் வழிமுறைகள், பாதுகாப்பு ஏற்பாacடுகள், போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பது, சிறுமிகள் மீதான பாலியன் வன்கொடுமை, பெண் வன்கொடுமை போன்றவை குறித்து விளக்கம் அளித்தார்.

மேலும், ‘‘பெண்கள் வெளியில் செல்லும்போது பாதுகாப்பாக இருக்கவேண்டும். கழுத்தில் செயின் அணிந்திருந்தால் துப்பட்டாவால் மூடிக்கொண்டு செல்லவேண்டும். செல்போனில் பேசிக்கொண்டு போகும்போது பின்னால் யாராவது வருகிறார்களா என பார்க்க வேண்டும். வழிப்பறி, கொள்ளை முதலான குற்றச் சம்பவங்கள் குறித்து புகார் தெரிவிக்க பொதுமக்கள் நேரடியாக தன்னை அணுகலாம். பள்ளி, கல்லூரி அருகில் குட்கா விற்பனை செய்தால் தகவல் கொடுக்கலாம். அவ்வாறு தகவல் கொடுக்கின்றவர்களின் பெயர், முகவரி பற்றிய விவரங்கள் பாதுகாக்கப்படும்,’’ என்றார். நிகழ்ச்சியில், 30க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.

Related Stories: