சென்னை விமான நிலையத்தில் பெண்களின் உள்ளாடையில் கட்டுக்கட்டாக கரன்சிகள்

சென்னை: சென்னையில் இருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த  பயணிகளை, விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். திருச்சியை சேர்ந்த லட்சுமி (35), கனகவல்லி (29), திண்டுக்கல்லை சேர்ந்த மாரியம்மாள் (39) ஆகிய 3 பெண் பயணிகளின் உள்ளாடைகளுக்குள் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளை மறைத்து வைத்திருந்தனர். அதன் மதிப்பு ரூ.35 லட்சம். மூன்று பெண்களையும் சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: