சில்லி பாயின்ட்...

* எஸ்டோனியா அணி பின்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. கேரவா தேசிய அரங்கில் இந்திய நேரப்படி இன்று பகல் 1.00 மணிக்கு தொடங்கி முதல் டி20 ஆட்டமும், மாலை 5.00 மணிக்கு தொடங்கி 2வது டி20 ஆட்டமும் நடைபெற உள்ளது. இப்படி 2 நாடுகள் ஒரே நாளில் 2 முறை டி20ல் மோதுவது இதுவே முதல்முறை.

* புரோ லீக் ஹாக்கி தொடரின் மகளிர் பிரிவில் நேற்று இந்தியா - அர்ஜென்டினா மோதிய ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிரா ஆனதை அடுத்து, பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. அதில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது.

* டெல்லியில் நேற்று தொடங்கிய ஆசிய சைக்ளிங் சாம்பியன்ஷிப் தொடரில் (ட்ரேக்) இந்தியா 1 தங்கம் உட்பட மொத்தம் 10 பதக்கங்களை கைப்பற்றி அசத்தியது.

* தோஹாவில் நடக்கும் ஆசிய கலைநய ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியின் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை பிரனதி நாயக் வெண்கலப் பதக்கம் வென்றார்.

* காயம் காரணமாக விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் இருந்து விலகுவதாக, ஜப்பான் நட்சத்திரம் நவோமி ஒசாகா அறிவித்துள்ளார்.

* உலக டேபிள் டென்னிஸ் காலிறுதியில் சீன தைபே வீரர் சுவாங் யுவானுடன் நேற்று மோதிய இந்திய வீரர் சத்தியன் ஞானசேகரன் 7-11, 9-11, 5-11 என்ற நேர் செட்களில் தோற்று வெளியேறினார்.

Related Stories: