×

லண்டனில் அஜித் பைக் பயணம்

சென்னை: லண்டனில் அஜித் பைக் பயணம் மேற்கொண்டுள்ளார். வலிமை படப்பிடிப்பை முடித்ததும் பல இடங்களுக்கு பைக்கில் பயணம் மேற்கொண்டார் அஜித். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா நாட்டுக்கு சென்று அங்கும் பல இடங்களுக்கு பைக்கிலே சென்றார். இதற்கிடையே வினோத் இயக்கும் அடுத்த படத்தின் ஷூட்டிங்கிற்காக அவர் ஐதராபாத் சென்றிருந்தார். இப்போது படப்பிடிப்புக்கு விடுமுறை கிடைத்ததால் அஜித் லண்டனுக்கு பறந்துவிட்டார். அங்கு பைக் பயணத்தில் அவர் பிசியாகிவிட்டார்.

லண்டன் சாலைகளில் பைக்குடன் அவர் நின்றிருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்திலே ‘ஏகே 61’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்த அஜீத் இங்கிலாந்துக்கு பைக் பயணமாக சென்றுள்ளார் என்பதும் இதனை அடுத்து அவர் இந்தியா திரும்பியவுடன் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது. ’ஏகே 61’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் புனேவில் நடைபெற இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பில் நடிகை மஞ்சுவாரியார் உள்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags : Ajit ,London , Ajith bike ride in London
× RELATED ரெண்டு பேருக்கும் கொம்பு ஊதும்...