×

வழக்கறிஞரை தாக்கிய வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

சென்னை: சொத்து வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில் செய்து வருபவர் எஸ்.காசிராஜன். கடந்த 1989ல் பட்டுக்கோட்டையில் உள்ள சொத்து தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் காசிராஜன் உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார். தீர்ப்பு இவருக்கு சாதகமாக வந்துள்ளது. அந்த இடம் ஆக்கிரமிப்பு தொடர்பாக வழக்கறிஞர் காசிராஜனிடம் அந்த நபர் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட இடத்தை மீட்பதற்காக 2010 ஏப்ரல் 22ம் தேதி காசிராஜன் பட்டுக்கோட்டை சென்றபோது அவரை கூலிப்படையினர் கடுமையாக தாக்கியுள்ளனர். இது குறித்த மேல்முறை யீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 2011ல் பிறப்பித்த உத்தரவில், வழக்கறிஞர் காசிராஜனுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு தரவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி எம்.கோவிந்தராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றம் செய்யப்படுகிறது. திறமையான அதிகாரி இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். விசாரணையை தஞ்சாவூர் எஸ்பி கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : Transfer to CPCIT trial for assault case
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...