×

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் நிர்வாகத்தை ஒழிக்க வேண்டும்: விசாரணைக்குழுவுக்கு கோரிக்கை

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் பரம்பரை தீட்சிதர்கள் நிர்வாகத்தை ஒழிக்க மக்கள் அதிகாரம் வலியுறுத்தியுள்ளது. மக்கள் அதிகாரம் சார்பில், 140 ஆண்டுகளாக தீர்க்கப்படாத நடராஜர் கோயில் பிரச்னையில் என்ன செய்ய வேண்டும் என கருத்தரங்கம் சென்னையில்  நடந்தது. இதில் முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சுவாமிநாதன், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொது செயலாளர் வன்னியரசு, மக்கள் அதிகாரம் தலைவர் ராஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பேசியதாவது: சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிற கோயில்களில் உள்ளது போன்று உண்டியல் வைத்து பக்தர்களிடம் காணிக்கை பெற வேண்டும். அனைத்து விதமான பூஜை, அர்ச்சனைகளுக்கு ரசீது தரப்பட வேண்டும். சிற்றம்பல மேடையில் நின்று நடராஜரை தரிசிக்க கட்டணம் வசூலிக்க கூடாது. நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நகைகள், நிலங்கள் மற்றும் சொத்து விவரங்களை அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் வெளியிட வேண்டும். பரம்பரை வாரிசுரிமை, நிர்வாக முறை சட்டப்படி ஒழிக்கப்பட்டுவிட்டது. சிதம்பரம் கோயிலில் மட்டும் பரம்பரை தீட்சிதர்கள் நிர்வாகம் ஒழிக்கப்பட வேண்டும். அனைத்து சாதி அர்ச்சகர் பணி நியமனம் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கும் வேண்டும். நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பிய தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும் என்றனர்.

Tags : Chidambaram ,Dikshit ,administration ,Natarajar , Chidambaram should abolish Dikshit administration in Natarajar temple: Demand for inquiry committee
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...