×

தூத்துக்குடி வடக்கு, கிழக்கில் இருந்து வரும் பஸ்கள் புதிய பேருந்து நிலையத்திற்குள் பயணிகளை இறக்கிவிட உத்தரவு

தூத்துக்குடி : தூத்துக்குடியிலிருந்து சென்னை, மதுரை, கோவை, ராமநாதபுரம், கோவில்பட்டி, எட்டயபுரம்  உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் புதிய பஸ் நிலையத்தில் இருந்துதான் புறப்படுகிறது. அதேபோல், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட தெற்கிலிருந்து வரும் பஸ்களும் புதிய பேருந்து நிலையத்திற்குள் வந்துதான் மதுரை, கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு செல்கிறது.

ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியிலிருந்து வந்து திருச்செந்தூர், வைகுண்டம், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் வழியாக செல்லும் பேருந்துகள், புதிய பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல் வெளியில் உள்ள பாலம் அருகில் பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிடுகின்றன. இதனால் பயணிகள்., அந்த சாலையை கடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜிடம் பயணிகள் புகார் தெரிவித்தனர்.இதையடுத்து வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் இருந்து வரும் அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திற்குள் சென்றுதான் ஆட்களை இறக்கி செல்ல வேண்டும். அதுகுறித்து அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். அதை மீறும் பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில், போக்குவரத்து காவல்துறை சார்பில் பாலத்தின் முகப்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருக்கிறது. 


Tags : Thuthukudi , Thoothukudi, Bus Stand, New Bus Stand,Madurai
× RELATED தமிழ்நாட்டில் டெங்கு கட்டுக்குள் உள்ளது: அமைச்சர் பேட்டி