கழுகுமலையில் கனமழை சமணர் பள்ளியில் தடுப்பு கம்பிகள் சேதம்

கழுகுமலை : கழுகுமலையில் பெய்த கனமழைக்கு சமணர் பள்ளி தடுப்பு சுவர்களில் இரும்பு கம்பிகள் இடிந்து விழுந்தது. தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில், பிரசித்திப் பெற்ற வெட்டுவான் கோயில் உள்ளது. இக்கோயில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. எட்டாம் நூற்றாண்டில் அதிமதுர மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டது.

இக்கோயிலில் மேற்மலை பகுதியில் சமணர் பள்ளி அமைந்துள்ளது. இங்கு சமண சித்தாந்தம் போதிக்கப்பட்டதாக வரலாறு உள்ளது. பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்செழியன், புத்தர் சிற்பங்கள் இங்கு வடிவமைக்கப்பட்டு உள்ளன. இங்கு தினமும் சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொல்லியல் துறை ஆர்வலர்கள் வந்து செல்கின்றனர்.  

இந்நிலையில் கழுகுமலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழைக்கு சமணர் பள்ளிக்கு செல்லக்கூடிய பகுதியில் உள்ள தடுப்புச் சுவர் மற்றும் இரும்பு கம்பிகள் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பணியில் இருந்த காவலர்கள் அருண் மற்றும் கங்காதுரை ஆகிய இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடுப்புச் சுவர் இடிந்து விழுந்த போது சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் இல்லாததால் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது.

Related Stories: