இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கே.எல்.ராகுலுக்கு பதில் மயங்க் அகர்வால் சேர்ப்பு?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட் மற்றும் 3 ஒன்டே மற்றும் 3 டி.20 போட்டியில் விளையாடுகிறது.

இதற்காக இந்திய அணி நேற்று முன்தினம் இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றது.

இதனிடையே  இடுப்பில் காயம் காரணமாக  துணை கேப்டன் கே.எல்.ராகுல் இங்கிலாந்து தொடர் ஆடுவது சந்தேகம்தான். இதனால் அவருக்கு பதிலாக மாற்று வீரராக மயங்க் அகர்வால் இங்கிலாந்து புறப்பட்டுச் செல்கிறார். மேலும் கே.எல்.ராகுல் உடற்தகுதி பெறாத பட்சத்தில் ரிஷப்பன்ட் துணை கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Stories: