ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் தடை

தருமபுரி: ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது, அதிக நீர்வரத்து காரணமாக பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Related Stories: