×

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அறிவிப்பு: ஒன்றிய அரசு வெளியீடு

புதுடெல்லி: வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்கும் வகையில் ஒன்றிய அரசு கடந்த ஆண்டு இறுதியில் சட்ட திருத்தம் நிறைவேற்றியது. இதன் மூலம் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளராக பதிவு செய்வது தடுக்கப்படும். இதுதவிர 18 வயது நிரம்பியவுடனே வாக்காளராக பதிவு செய்யும் வகையில் ஆண்டுக்கு 4 கட்-ஆப் தேதிகள் வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் தேர்தல் சட்டத்தில் பாலின சமத்துவத்தை பேணும்வகையில் மனைவி என்ற வார்த்தை வாழ்க்கைத்துணை என குறிப்பிட்டு திருத்தப்படுகிறது. இதன் மூலம் தொலைதூர பகுதிகள், வெளிநாடுகளில் பணியாற்றும் ராணுவ வீரர் மற்றும் வீராங்கனைகளின் வாழ்க்கைத்துணை வாக்களிக்க வாய்ப்பு ஏற்படும்.  

இவ்வாறு தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்ட திருத்தம் அமலில் வந்துள்ளது. இது தொடர்பாக 4 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளதாக கிரண் ரெஜிஜூ தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Action to link Aadhaar with voter list
× RELATED தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக மணல்...