சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் அதிகரிப்பு

புதுடெல்லி:  சுவிட்சர்லாந்து உட்பட பல்வேறு உலக நாடுகளில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் தங்கள் பணத்தை அதிகளவில் போட்டு வைக்கின்றனர். இவற்றில் கருப்பு பணமும் அடங்கும். இவை முறையான பணத்தையும், கருப்பு பணத்தையும் டெபாசிட் செய்வதற்கு சுவிஸ் நாட்டு வங்கிகளையே இந்தியர்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

 

கடந்த 2020ம் ஆண்டு இறுதி நிலவரப்படி, சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம்  ரூ.20,700 கோடியாக இருந்தது. கொரோனா காலத்திற்கு பின்  இயல்பு வாழ்க்கை திரும்பி இருப்பதை தொடர்ந்து, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் போடுவதும் அதிகமாகி இருக்கிறது.

கடந்தாண்டு மட்டும், கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ரூ.30,500 கோடிக்கு மேல் டெபாசிட் உயர்ந்துள்ளது. 2020ம் ஆண்டை விட 2021ம் ஆண்டில் சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

சுவிஸ் வங்கிகளில் ெடபாசிட் செய்யும் பணத்தை, அந்நாடு கருப்புப் பணமாக கருதவில்லை. வரி ஏய்ப்புக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைய சுவிட்சர்லாந்து ஆதரிப்பதாக அந்நாடு கூறியுள்ளது. சுவிஸ் வங்கியில் உள்ள டெபாசிட் பட்டியலில் இந்தியா 44வது இடத்தில் உள்ளது.

Related Stories: