குமரி விவேகானந்தர் பாறையில் இருந்து வள்ளுவர் சிலைக்கு ரூ.37 கோடியில் கண்ணாடி இழை பாலம் கட்டுமான பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு ₹37 கோடி செலவில் கண்ணாடி இழை பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

பொதுப்பணித்துறையில் நடந்து வரும் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடந்தது. பின்னர் அவர் அளித்த பேட்டி:

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு செல்வதற்கான கண்ணாடி இழை பாலம் அமைப்பதற்கான டெண்டர் பணிகள் முடிந்துள்ளது. விரைவில் பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும். மதுரையில் கலைஞர் நூலக பணிகள் வேகமாக நடந்து வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்படும்.

தமிழக அரசின்  நெடுஞ்சாலை மற்றும்  பொதுப்பணித்துறை மற்றும் சாலைப் பணிகளுக்கான, நில எடுப்பு பணிக்கு என சிறப்பு நில எடுப்பு கோட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல்கட்டமாக எந்தெந்த இடங்களில் நில எடுப்பு பணிகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நில எடுப்பு பணிகள் தாமதம் ஏற்படும் பட்சத்தில் அதற்கான திட்ட மதிப்பீடு  அதிகரித்து தமிழக அரசுக்கு  நிதி சுமை ஏற்படுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சாந்தோமில் இருந்து கிண்டி வரை மேம்பாலம் அமைப்பதற்கான பணிகளுக்கு திட்ட அறிக்கை தயாரிக்க கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: