மாடம்பாக்கம் ஊராட்சியில் நாகாத்தமன் கோயில் கும்பாபிஷேகம்

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே மாடம்பாக்கம் ஊராட்சியில் உள்ள நாகாத்தம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கூடுவாஞ்சேரி அருகே மாடம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பாரதி நகரில், ஸ்ரீ நாகாத்தம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் கோயில் புனராவர்த்தன அஷ்டபந்தன  கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமர்சையாக நடந்தது. விழாவில்,  நாடி சந்தானம், யாக பூஜை, பூர்ணாஹூதி, நாதஸ்வரங்கள் முழங்க பூஜைகள் மற்றும் சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க நடைபெற்றன.இதனை தொடர்ந்து, கோயிலில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம்  நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக ஒன்றிய கவுன்சிலர் ராஜலட்சுமிராஜி, போலீஸ் உதவி கமிஷனர் பி.கே.ரவி, மணிமங்கலம் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் ஆகியோர் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை தொடங்கி வைத்தனர். இதில், ஆதனூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன் உள்பட ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா முடிவில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

Related Stories: