உலக டேபிள் டென்னிஸ் சத்தியன் முன்னேற்றம்

ஸாக்ரெப்: உலக டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட, இந்திய நட்சத்திரம் சத்தியன் ஞானசேகரன் தகுதி பெற்றுள்ளார். குரோஷியாவில் நடைபெறும் இத்தொடரில், உலகின் 6வது ரேங்க் வீரரும், நடப்பு ஐரோப்பிய சாம்பியனுமான ஜார்ஜிக் டார்கோவுடன் (ஸ்லோவேனியா) நேற்று மோதிய சத்தியன் 6-11, 12-10, 11-9, 12-10 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். உலகின் டாப் 10 வீரர்களுக்கு எதிராக சத்தியன் பதிவு செய்த 2வது வெற்றி இது.முன்னதாக, 2019 ஆசிய சாம்பியன்ஷிப்பில் 5வது ரேங்க் வீரர் டோமகாஸு ஹரிமோட்டோவை (ஜப்பான்) அவர் வீழ்த்தி இருந்தார்.

Related Stories: