×

சில்லி பாயின்ட்...

* புரோ லீக் சர்வதேச  ஹாக்கித் தொடரின் மகளிர் பிரிவில் இன்று இந்தியா -  அர்ஜென்டினா, ஆண்கள் பிரிவில் இந்தியா -  நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டங்கள் இன்ற நெதர்லாந்தின் ரோட்டர்டம் நகரில் நடக்கின்றன. இந்திய மகளிர் அணி 22 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், இந்திய ஆண்கள் அணி 29 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளன.
* நேபாள நாட்டு பள்ளிகளில் விளையாட்டை மேம்படுத்தும் எஸ்ஜிஏடிஎப் அமைப்பு சார்பில் இந்தோ-நேபாள் சர்வதேச பள்ளிகளுக்கு இடையிலான கபடி, சிலம்பம் உட்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. அதில் இந்தியா 40 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியது. அதில் 23 தங்கப்பதக்கங்களை தமிழக மாணவர்கள் கைப்பற்றினர். சென்னை திரும்பிய தமிழக மாணவர்களுக்கு எழும்பூர் ரயில்நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
*  சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரி மாணவர் அபய்சிங் (23), சமீபத்தில் பிரான்சில் நடைபெற்ற லோரியன்ட் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் சாம்பியன் பட்டம் என்றார். பைனலில் சுவிட்சர்லாந்து வீரர் ராபின் கடோலாவை 11-6, 14-16, 9-11, 11-9, 16-14 என்ற செட் கணக்கில் அவர் வீழ்த்தியிருந்தார். இந்நிலையில் நாடு திரும்பிய அபய்க்கு குருநானக் கல்லூரி சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.
*  இந்தியா - இங்கிலாந்து இடையிலான கிரிக்கெட் தொடர் ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு இங்கிலாந்தில் இந்திய கிரிக்கெட் அணி பெற்ற மிகச் சிறந்த வெற்றிகளை ‘ஆர்கிடெக்ட்ஸ் இன் ஒயிட்-இந்தியா கிரிக்கெட் இன் இங்கிலாந்து’ என்ற பெயரில் ஆவணப்படத் தொடர் தயாரிக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் சோனி தொலைக்காட்சிகளில் தமிழ் (சோனி டென் 4), ஆங்கிலம் (சோனி டென் 1), இந்தி (சோனி டென் 3) தெலுங்கு (சோனி டென் 4) மொழிகளில் ஒளிபரப்பாகிறது.
*  இந்தியா கால்பந்து அணி கேப்டன் சுனில் செட்ரியின் (37 வயது) வாழ்க்கை வரலாற்றை விளக்கும் சிறப்பு ஆவணப் படத் தொடரை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு பிபா தயாரித்துள்ளது. இந்த தொடரின் சில பகுதிகள் செட்ரி தற்போது வசிக்கும் பெங்களூருவிலும், அவரது பெற்றோர் வசிக்கும் டெல்லியிலும் படமாக்கப்பட்டுள்ளன. சர்வதேச போட்டிகளில் 84 கோல் அடித்து ஹங்கேரி வீரர் பெரன்க் புஸ்காஸ் சாதனையை சமன் செய்துள்ள செட்ரிக்கு இங்லிஷ் பிரிமியர் லீக் போட்டியில் பங்கேற்கும் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்புர் கிளப் நிர்வாகம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
*   யு-16 ஆசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதியில் விளையாட இந்திய அணி முதல் முறையாக தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.

Tags : Chilli Point , Roulette Point
× RELATED சில்லி பாயின்ட்...