ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா விற்ற பிரபல ரவுடியின் கூட்டாளிகள் 3 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர்:ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் சுற்றுவட்டார பகுதிகளில் இளைஞர்கள் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக  போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பெரும்புதூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கிளாய் முந்திரி தோப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 3 பேரிடம் விசாரித்தனர். விசாரணையில், போலீசாரிடம் முன்னுக்குபின் முரணாக பதில் அளிக்கவே இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னர், 3 பேரையும் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை செய்ததில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் பிரபல ரவுடி குள்ளா என்கிற விஷ்வாவின் கூட்டாளிகளான சந்துரு (25), மகேஷ் (22), பாலச்சந்துரு (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.   

Related Stories: