மீஞ்சூர் பால விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

பொன்னேரி: மீஞ்சூர், பச்சையம்மன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீபால விநாயகர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.மீஞ்சூர் பச்சையம்மன் நகரில் ஸ்ரீபால விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. தற்போது சுவாமி சன்னதி, விமான கோபுரம், சன்னதி கோபுரம், ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீ உண்ணாமுலை அம்மன் உடனுறை ஸ்ரீஅண்ணாமலையார், ஸ்ரீகாமாட்சி அம்மன், ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள், ஸ்ரீபக்த ஆஞ்சநேயர், நாகாத்தம்மன், ஸ்ரீலிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன், நவகிரகம், ஸ்ரீசாய் பாபா உள்ளிட்ட சன்னதி நிறைவாக பரிவார சகிதம் நூதனமாக அமைக்கப்பெற்றுள்ளது. இதற்கான ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் சிவாச்சார்யார்கள் மற்றும் சர்வ சாதகர்கள் வேதம் ஓத மேளதாளங்கள் முழங்க நேற்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி யாக சாலையிலிருந்து பிராதன கலசங்கள், பரிவார கலசங்கள் புறப்பட்டு கலசத்திற்கு  புனித நீர் ஊற்றப்பட்டு, பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின் தீர்த்தபிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Related Stories: