×

ரயில்வே என்பது தேசத்தின் சொத்து; இளைஞர்கள் யாரும் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம்: ஒன்றிய அமைச்சர் வலியுறுத்தல்..!

டெல்லி: இளைஞர்கள் ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய அரசு அக்னிபாத் என் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் பணியாற்ற இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளது. இந்த திட்டத்தின்கீழ் சேரும் வீரர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற முடியும். பின்னர் ராணுவ நிர்வாகம் அனுமதித்தால்தான் தொடர்ந்து பணியாற்ற முடியும். இந்த திட்டத்திற்கு நாடு முழுவதும் இளைஞர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்ற போராட்டங்கள் நடந்த நிலையில் வடமாநிலங்களில் ரயில்களுக்கு தீ வைப்பு போன்ற கலவரங்கள் தொடர்ந்து வருகிறது. பீகார் , உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா, தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கடுமையாக உள்ளது.

குறிப்பாக, பீகார், உ.பி மாநிலங்களில் ரயில்களில் தீ வைத்து எரித்ததால் போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது. ரயில் பெட்டிகள் எரிப்பு சம்பவங்களால் நாடு முழுவதும் 200 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இளைஞர்கள் ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இளைஞர்கள் யாரும் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம். ரயில்வே என்பது நாட்டின் சொத்து, அவற்றை நாம் தான் பாதுகாக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Tags : Union Minister , The railways are the property of the nation; No youth should engage in violent struggles: Union Minister urges ..!
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...