ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கல்லூரி மாணவி சடலம் மீட்பு

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கல்லூரி மாணவியின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், அவர் தற்கொலை செய்து கொண்டாரா என விசாரித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் காலை, மணல்திட்டு காவிரி ஆற்றில் இளம்பெண்ணின் சடலம் மிதந்து வந்தது. இதைப்பார்த்த மீனவர்கள் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடம் விரைந்த ஒகேனக்கல் போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் தர்மபுரி நெல்லிநகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகள் பிரியங்கா (21) என தெரியவந்துள்ளது. இதையடுத்து சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்த பிரியங்கா. கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே, அவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். காவிரி ஆற்றில் கல்லூரி மாணவி சடலமாக மீட்ட சம்பவம், ஒகேனக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: