ரன்தீப்பின் செய்தி தொடர்பாளர் பதவி பறிப்பு; காங்கிரஸ் கட்சி திடீர் அறிவிப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் செய்தி ெதாடர்பாளராக இருந்த ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவின் பதவி பறிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில், ‘அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (ஏஐசிசி) பொதுச் செயலாளரும், செய்தி தொடர்பாளருமான ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவுக்குப் பதிலாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தி தொடர்பாளராக செயல்படுவார்.

இவர், சமூக ஊடகம் உள்ளிட்ட தகவல் தொடர்பு, விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புகளுக்கான பொதுச் செயலாளராக செயல்படுவார். செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து ரன்தீப் சுர்ஜேவாலா விடுவிக்கப்பட்டுள்ளார். அவர், கர்நாடகா மாநில பொதுச் செயலாளர் பொறுப்பில் நீடிப்பார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ராஜ்யசபா தேர்தலில் ராஜஸ்தானில் இருந்து ரன்தீப் சிங் சுர்ஜேவாலா எம்பியாக தேர்வு ெசய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: