தேடப்படும் குற்றவாளிகள் நிறைந்த கட்சியாக பாஜக உள்ளது - கி.வீரமணி விமர்சனம்

கும்பகோணம்: தமிழ்நாட்டில் தேடப்படும் குற்றவாளிகள் அதிகம் உள்ளவர்களின் கட்சியாக பாஜக உள்ளதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.

கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி தமிழ்நாட்டில் பாஜக எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்பதை அதிமுகவை சேர்ந்த பொன்னையனிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று விமர்சித்தார்.

அனைவரும் சமம் என்பதையே சனாதன தர்மம் கூறுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தது குறித்து கி.வீரமணியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர் சனாதன தர்மம் என்பது ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தது என்பதை ஆதாரங்கள் உடன் சுட்டிக்காட்டினார். பனாரஸ் இந்து பல்கலை புத்தக ஆதாரத்தை  சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்தார்.    

Related Stories: