×

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வரும் 20ம் தேதி முதல் முகக்கவசம் கட்டாயம்; நீதிபதி பி.என். பிரகாஷ்

மதுரை: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வரும் திங்கள்கிழமை முதல் முகக்கவசம் கட்டாயம் என நிர்வாகம் நீதிபதி பி.என். பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருவதால் நீதிபதி பி.என். பிரகாஷ் முகக்கவசம் கட்டாயம் என தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு விசாரணைகளை மேற்கொள்ளும்போது இந்த கருத்தை தெரிவித்தார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது ஏற்கனவே 3 கொரோனா அலைகளை தாண்டிவிட்டோம், தப்பிவிட்டோம் நாம் இப்போ உயிரோடு பயணித்து இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

இன்னும் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் ஆகவே பாதுகாப்பு கருதி 20ம் தேதி திங்கள்கிழமை முதல் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் வழக்குக்காக வரும் அனைவருமே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உள்ளே வரும் அனைவருமே முகக்கவசம் அணியவேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார்.

அதுபோக நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கிற்க்கு சம்மந்தப்பட்டவர் மட்டுமே உள்ளே வரவேண்டும் என்று கூறினார். வழக்கிற்க்கு சம்பந்தம் இல்லாதவர்கள் உள்ளே வருவதை தவிர்க்கவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.   


Tags : Madurai ,Court ,Judge ,B. N.N. Prakash , The first mask will be mandatory on the 20th at the Madurai branch of the High Court; Judge P.N. Prakash
× RELATED மதுரை மத்திய சிறை கைதிகளுக்கு பல் மருத்துவ முகாம்