நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறான ராக்கெட்ரி திரைப்பட போஸ்டருடன் நடிகர் மாதவன் திருப்பதியில் சுவாமி தரிசனம்.!

திருமலை: இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை கொண்டு எடுக்கப்பட்ட ராக்கெட்ரி நம்பி விளைவு திரைப்பட போஸ்டருடன் நடிகர் மாதவன் சுவாமி தரிசனம் செய்தார். மாதவன் இயக்கி நடித்துள்ள ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’ திரைப்படத்தின் போஸ்டருடன் நடிகர்  மாதவன் ஏழுமலையானை தரிசனம் செய்தார். இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள ராக்கெட்ரி  நம்பி விளைவு. திரைப்படத்தை  நடிகர் மாதவன் நடித்து இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன், ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாட்டுக்கு விற்றதாக, 1994-ல் கேரள காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் நம்பி நாராயணன் நிரபராதி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் பின்னணியில் உள்ள உண்மையை வெளிப்படுத்தும் கதையாக உருவாகியுள்ள ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் என பெயரிடப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் இந்தி, தமிழ், ஆங்கில மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் ஜுலை 1 ம் தேதி வெளியாகிறது.

Related Stories: