அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக வெடிக்கும் வன்முறை: அரியானாவின் குருகிராமில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு..!!

சண்டிகர்: அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து அரியானாவின் குருகிராமில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் குருகிராமில் 4 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. அரியானாவில் போராட்டம் நடைபெறும் சில பகுதிகளில் இணைய சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.

Related Stories: