சென்னை இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உடன் தம்பிதுரை எம்.பி. சந்திப்பு..!!

சென்னை: சென்னை இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தம்பிதுரை எம்.பி. சந்தித்து பேசினார். நேற்று சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நிலையில் இன்று தம்பிதுரை ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துள்ளார். பொதுச்செயலாளர் பதவியை பழனிசாமிக்கு விட்டுத்தர மறுத்து பன்னீர் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் சுமுகத் தேர்வு காண தம்பிதுரை ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Related Stories: