மதத்தின் பெயரால் வன்முறை பற்றி பேச்சு சாய் பல்லவி மீது போலீசில் புகார்

ஐதராபாத்: பசு பாதுகாவலர்களையும் காஷ்மீர் தீவிரவாதிகளையும் இணைத்து பேசியதாக நடிகை சாய்பல்லவி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த சாய் பல்லவி, ‘காஷ்மீர் பண்டிதர்களை அங்குள்ள தீவிரவாதிகள் கொன்றார்கள் என கூறுகிறோம். இது நடந்து முடிந்த விஷயம். இப்போது வடநாடுகளில் மாடுகளை கொண்டு செல்லும் முஸ்லிம்களை வழிமறித்து, ஜெய்ஸ்ரீராம் என கூச்சலிடக் கோரி கொல்கிறார்கள். இது மட்டும் நியாயமா? மதங்களின் பெயர்களால் இதுபோல் கொலைகள் நடக்கலாமா?’ என கேட்டிருந்தார். சாய்பல்லவியின் கருத்துக்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் பஜ்ரங் தளத்தின் உறுப்பினர் அகில் என்பவர், ஐதராபாத் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் சாய் பல்லவி, ‘பசு பாதுகாவலர்களையும் காஷ்மீர் தீவிரவாதிகளையும் இணைத்து பேசினார். இதற்காக சாய் பல்லவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என புகார் மனுவில் கூறியுள்ளார்.

Related Stories: