ஏழை மாணவர்களின் படிப்பு செலவை ஏற்றார் ஜெயம் ரவி

சென்னை: 2 ஏழை மாணவர்களின் படிப்பு செலவை ஜெயம் ரவி ஏற்றார். மதுரை நிலையூரை சேர்ந்தவர் செந்தில். இவர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் இருந்தார். சில நாட்களுக்கு முன் விபத்தில் இறந்தார். இதை அறிந்து அவரது வீட்டுக்கு சென்று குடும்பத்தாருக்கு ஜெயம் ரவி ஆறுதல் கூறினார். பின்னர் செந்திலின் குடும்பத்துக்காக ரூ5 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்தார். மேலும் செந்திலின் 2 பிள்ளைகளும் படிப்பதற்காக அவர்களின் முழு படிப்பு செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாக ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

Related Stories: