மதுராந்தகம் ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா

மதுராந்தகம்,: மதுராந்தகத்தில் நடந்த ஜமாபந்தி நிறைவுநாளில் 22 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுக்காவில் ஜமாபந்தி கூட்டம் கடத்த மாதம் 31ம் தேதி தொடங்கியது. மதுராந்தகம் தாலுகா அலுவலக வளாகத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதன் நிறைவு நாள் கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு, வட்டாட்சியர் நடராஜன் தலைமை தாங்கினார்.  இதில், சிறப்பு அழைப்பாளர்களாக மதுராந்தகம் நகரமன்ற தலைவர் மலர்விழி குமார், அச்சிறுப்பாக்கம் ஒன்றிய பெருந்தலைவர் ஒரத்தி கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, 3 பேருக்கு முதியோர் உதவித் தொகை, 4 பேருக்கு விதவை உதவித்தொகை, முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒருவருக்கு உதவி, 3 நபர்களுக்கு திருமண உதவித்தொகை ஒருவருக்கு, சாலை விபத்து நிவாரணம் ஒருவருக்கு கிராம நத்தம் பட்டா 10 பேருக்கு, பட்டா  மாற்றம் 14 நபர்களுக்கு, இலவச வீட்டுமனைப்பட்டா 22 நபர்களுக்கும், பழங்குடியினர் நல வாரிய அடையாள அட்டைகள் 7 பேருக்கு உள்ளிட்ட பல்வேறு அரசு நல உதவி திட்டங்கள் வழங்கப்பட்டன.

Related Stories: