தென்காசி கலெக்டர் ஆபீசில் மாவட்ட கல்வி அலுவலர் மரணம்

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் மாவட்ட கல்வி அலுவலரான சுப்பிரமணியன் (52), தென்காசியில் நேற்று புதிய கலெக்டராக பொறுப்பேற்ற ஆகாசை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க கலெக்டர் அலுவலகம் வந்தார். பார்வையாளர் பகுதியில் காத்திருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அரசு அலுவலர்கள், அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

Related Stories: