×

ஆளுநர் ஒப்புதல் இன்றி விடுவிக்க கோரி நளினி தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் இன்று தீர்ப்புஆளுநர் ஒப்புதல் இன்றி விடுவிக்க கோரி நளினி தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் இன்று தீர்ப்பு

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆளுநர் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக்கோரி  நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் மீண்டும்  விசாரணைக்கு வந்தது. அப்போது நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் ஆளுநர் முடிவு எடுக்காமல் இருந்ததும்,  இரண்டரை ஆண்டுகளுக்கு பின் அமைச்சரவை பரிந்துரையை ஜனாதிபதிக்கு அனுப்பியதும் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. எனவே உயர் நீதிமன்றம் அதை சட்டவிரோதம் என்று அறிவிக்கலாம் என்றார்.

அப்போது, குறுக்கிட்ட தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றம் போல், விடுதலை செய்வது தொடர்பாக உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. அதற்கு உச்ச நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என்றார். அதற்கு, வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், விடுதலை செய்யக் கோரவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் விடுதலை செய்யும்படி அரசுக்கு உத்தரவிட தான் கோருகிறோம். அநீதியை அழிக்க உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கலாம். என கோரினார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்,  ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018ல் அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரைத்தது. ஆளுநரின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் விளக்கியுள்ளது. விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரின் கையெழுத்து அவசியம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றமே பரிசீலிக்கலாம் என்றார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, நளினி வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பளிக்கிறது.

Tags : Nalini ,Governor ,ICC , The iCourt today passed judgment in the case of Nalini, who is seeking release without the consent of the Governor
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...