×

சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க ஆசியான் மாநாட்டில் உறுதி: டெல்லியில் 10 நாடுகள் பங்கேற்பு

புதுடெல்லி: டெல்லியில் நடந்த ஆசியான் வெளியுறவு அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு அளிப்பதாக இந்தியா உறுதி அளித்தது. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள 10 நாடுகளுடனான 30 ஆண்டு நட்புறவை வெளிப்படுத்தும் வகையில், அதன் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில், உறுப்பினர் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்றும், இன்றும் 2 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில், ஆசியான் நாடுகளுடன் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு அளிப்பதாக இந்தியா உறுதி அளித்தது.

இது தொடர்பாக இந்தியா-சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர்கள் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், `தென் சீன கடலில் சீனா ஆதிக்கம் செலுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது. ஐநா. உடன்படிக்கை, கடல் சட்டம் தொடர்பான ஐநா கூட்டமைப்பின் உடன்படிக்கைகள் மற்றும் ஒப்பந்தங்கள் உள்ளிட்ட சர்வதேச சட்டங்களை உள்ளடக்கிய பிராந்திய ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை பராமரிக்கவும், பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான சவால்களை ஒன்றிணைந்து எதிர்கொள்ளவும் நாடுகள் ஒப்புக்கொண்டன. இந்தியா மற்றும் அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளும் ஆசியான் நாடுகளின் நட்பு நாடுகளாக உள்ளன. நாடு கடந்த குற்றங்கள், வன்முறை, தீவிரவாதத்தை கட்டுப்படுத்துதல், அழித்தல் நடவடிக்கைகளில் ஆசியான் நாடுகளுடன் இந்தியா ஒத்துழைக்க உள்ளது. மேலும், தடையற்ற வர்த்தகத்தை எளிதாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இந்தியா உறுதி அளித்துள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

* ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவு, ஒத்துழைப்பை மேம்படுத்துவது பற்றி ஆலோசனை நடத்தினர்.

Tags : ASEAN Summit ,China ,Delhi , Assurance at ASEAN Summit to Prevent Chinese Domination: 10 Nations Participation in Delhi
× RELATED சீனாவில் மலைப்பாதை சாலை சரிந்து...