×

வாட்ஸ்அப்பில் குறுந்தகவல் அனுப்பி கடலூர் கலெக்டர் பெயரில் பணம் பறிக்க முயற்சி: மர்ம நபருக்கு போலீஸ் வலை

கடலூர்: கடலூர் மாவட்ட ஆட்சியரின் பெயரில், வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் அனுப்பி, பணம் பறிக்க முயன்ற, மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும், அரசு அலுவலர்கள் சிலருக்கு, கடலூர் மாவட்ட ஆட்சியரின் பெயர் மற்றும் புகைப்படத்துடன் கூடிய குறுந்தகவல்கள் வாட்ஸ்அப் மூலம் வந்துள்ளது. அந்த குறுந்தகவலில் கடலூர் மாவட்ட ஆட்சியர் தனக்கு பணம் அனுப்பும்படி கூறப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த, அரசு அலுவலர்கள் இது குறித்து தங்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கண்காணிப்பாளர், அன்பழகன் இதுகுறித்து கடலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Cuddalore , Attempt to extort money in the name of Cuddalore Collector by sending SMS on WhatsApp: Police web for mysterious person
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!