அமமுக அமைப்பு செயலாளர் மனோகரன் நீக்கம்: டிடிவி.தினகரன் நடவடிக்கை

சென்னை: கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் அமமுக அமைப்புச் செயலாளர் பொன்.த.மனோகரனை கட்சில் இருந்து நீக்கி டிடிவி.தினகரன் நடவடிக்கை எடுத்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்ட அறிவிப்பு:

கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சிக்கு அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும் அமமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருக்கும் பொன்.த.மனோகரன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கிவைக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக்கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: