×

மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளிகளாக இருப்பின் கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களுக்கு புத்தாடை வழங்க நடவடிக்கை: அறநிலையத்துறை உத்தரவு

சென்னை: மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளிகளாக இருப்பின் கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களுக்கு கோயில் சார்பாக  புத்தாடை வழங்க வேண்டும் என்று அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கடந்த 2022ம் ஆண்டு சட்டமன்ற பேரவையில் ‘மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் கோயிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. மேலும், கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்திற்கான பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், துறையின் கட்டுபாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடைபெற்றால் அதற்கான கட்டணம் வசூலிக்கப்படாது எனவும், கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடைபெற்றால் பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்று அனைத்து கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு தற்போது அறிவிப்பு அனைத்து கோயில்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சட்டமன்ற பேரவை மானியக்கோரிக்கையின் போது, ‘கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் கட்டணம் ஏதுமின்றி திருக்கோயில் மண்டபங்களில் நடக்கும் திருமணங்களுக்கு வாடகையின்றி திருமணங்கள் நடத்திட அனுமதிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ள திருமணங்களில் மணமக்களுக்கு புத்தாடைகள் திருக்கோயில் சார்பாக வழங்கப்படும்’ அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் துறையின் ஆளுகைக்குட்பட்ட அனைத்து கோயில்களிலும் மற்றும் கோயிலுக்கு சொந்தமான மண்டபங்களில் நடக்கும் மாற்றுத்திறனாளிகள் திருமணங்களில் மணமக்களுக்கு கோயில் புத்தாடைகள் வழங்கப்பட வேண்டும் என அனைத்து கோயில் நிர்வாகிகளுக்கும் உத்தரவிடப்படுகிறது.

இத்திட்டத்தினை செயல்படுத்த தேவையான நிதியினை கோயில் வரவுசெலவுத் திட்டத்தில்  ஒதுக்கீடு செய்யவும் கோயில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.  இந்த உத்தரவினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து கோயில் நிர்வாகிகளுக்கும் செயல்படுத்த மண்டல இணை கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆணையர்களை மேலும், இப்பணிகளை தனிக்கவனம் செலுத்தி கண்காணிக்கவும் மண்டல சார்பாக இணை ஆணையர்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : If one of the bridegrooms is a transgender person, action will be taken to provide the bride and groom at the temple weddings: Order of the Treasury
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...