பூந்தமல்லி தாலுகாவில் ஜமாபந்தியில் 248 மனுக்களுக்கு தீர்வு

பூந்தமல்லி: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் பூந்தமல்லி, திருவேற்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளித்தனர். இதில் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை, ஆதரவற்ற விதவை சான்றிதழ், இலவச வீட்டுமனை பட்டா என மொத்தம் 920 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 248 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும், 672 மனுக்கள்மீது ஆய்வு செய்யப்பட்டு உரிய தீர்வு காணும் பணி நடைபெறுகிறது.

 

இந்நிலையில், நேற்று நடந்த ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ் பங்கேற்று, 248 பயனாளிகளுக்கு சான்றிதழ் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பூந்தமல்லி தாசில்தார் செல்வம், சமூக பாதுகாப்பு வளர்ச்சிப் பணி திட்டம் (தனி) தாசில்தார் சுகந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: