குமரியில் கட்டுமான பணிகளுக்கு தேவையான பொருள்களுக்கு தட்டுப்பாடு: நெல்லை கல்குவாரி விபத்திற்கு பிறகு விலை உயர்வு

குமரி: கன்னியாகுமரியில் எம் சாண்ட் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்துள்ளதால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டுமானப் பணிகளுக்கு தேவையான ஜல்லி, எம் சாண்ட் எனப்படும் பாறைப்பொடி உள்ளிட்டவை அண்டை மாவட்டமான நெல்லையிலிருந்து கொண்டுவரப்பட்டன. அந்த மாவட்டத்தில் கல்குவாரியில் விபத்து நடந்ததால் பாறைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்து கட்டுமான பொருட்கள் வருவது முற்றிலும் தடைபட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் அவற்றில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு யூனிட் எம் சாண்ட் 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 8 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு யூனிட் ஜல்லி 4,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், 6,500 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட கட்டுமான பணிகளும் விலை உயர்வால் தடைபட்டுள்ளதாக கட்டுமான பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.      

Related Stories: